CTJ அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(FASTNEWS – COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வௌியிட்டு, மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் (CTJ)செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூலை 25ம் திகதி வரை ஒத்தி வைக்க இன்று(09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.