கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட 03 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயவர்தன முன்னிலையில் இன்று(09) விளக்கமளித்த குறித்த திணைக்களம், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, சந்தேக நபர்களை இந்த மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்