(FASTNEWS|COLOMBO) விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து வௌியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வழமைபோல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.