போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) குருணாகல் வலய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய தனியார் வங்கி ஒன்றில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்பொது சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.