(FASTNEWS|COLOMBO) – ஆப்பிரிக்க நாடான பேர்கினா பசோவின் (Burkina Faso) டப்ளோ நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் இருந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர். பிற கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டு, ஒரு மருத்துவ மையமும் சூறையாடப்பட்டதாக அந்த நகரின் மேயர் ஊஸ்மன் ஜோங்கோ தெரிவித்துள்ளார்.
பேர்கினோ பசோவில் கடந்த 05 வாரங்களில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புர்கினா பசோவில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேவாலய தாக்குதல் சம்பவத்தையடுத்து, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதுடன், நகரத்தில் பதற்றம் நிலவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.