எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.