வான்கலங்களை பறக்கவிடுவது தடை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

(FASTNEWS | COLOMBO) – இலங்கைக்கு உரித்தான அக அல்லது புற வான்பரப்பில் வான்கலங்களை பறக்கவிடுவது மறு அறிவித்தல் விடுக்கும் வரை தடை செய்யப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில், எந்தவொரு ஆளில்லா விமானம் மற்றும் எந்தவொரு விசேட ட்ரோன் கருவி ஆகியவற்றுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.