நாமல் குமார CID இனால் கைது…

(FASTNEWS | COLOMBO) – ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரகாபொல பொலிஸ் நிலையத்தில்  முறைபாடொன்றை செய்ய வருகைத் தந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(13) ஹெட்டிபொல நகரில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, நாமல் குமாரவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றக்  காட்சிகள் ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டயும் குறிப்பிடத்தக்கது.