(FASTNEWS | COLOMBO) – கடந்த 21 – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக தேசிய சங்க சம்மேளனத்தால், இன்று(14) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தெரிந்திருந்தும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்புகளிலிருந்த விலகியிருந்தமை உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரரால், இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.