கற்றுக் கொண்ட பாடங்களை எதிர்காலத்துக்கு விட்டுச் செல்லாதிருப்போம் – சனா..

(FASTGOSSIP | COLOMBO) – கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டாம் என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எமக்கென்ற ஒரு நாடாக விளங்குவது இச்சிறிய நாடு மாத்திரமே. வன்முறைகளால் இந்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கையர்களாக எமக்கே அது பலவீனமாகும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று(13) இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பிலேயே சனத் ஜயசூரிய இவ்வாறு ​தெரிவித்துள்ளார்.