தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை..

(FASTNEWS | COLOMBO) – கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவிகளைக் கோரியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்தவர்கள், அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவர்கள் தொடர்பான தகவல்களை 011-2422176 / 011-2392900 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரியப்படுத்துமாறும் பொலிஸ் தலைமையகம் மேலும் கோரியுள்ளது.