குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…

(FASTNEWS | COLOMBO) – குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை, களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்ற பொலிஸ் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிடியவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.