(FASTNEWS|COLOMBO) – வத்தளை, மாபொல துவவத்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நான்கு வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் வீட்டில் இருந்த 20 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
மின் ஒழுக்கு காரணமாக தீப்பரவலுக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.