‘ஹிரு’ – ‘தெரண’ ஆகிய ஊடகங்கள் நாட்டில் வன்முறையினை தூண்டுகிறது – நிதியமைச்சின் விளம்பரங்களை நிறுத்த மங்கள நடவடிக்கை..

(FASTGOSSIP| COLOMBO) – சமூகங்களிடையே சகவாழ்வை குலைக்கும் வகையில் இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் இன ரீதியான உரைகளை ஊக்குவிக்கும் வானொலி ,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்களை வழங்காது என நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்;

“இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் விதமாக முக்கியமாக இரண்டு தொலைக்கட்சிகள் அதன் ஊடக நடவடிக்கைளை முன்னேடுத்து இருந்தது. அதில் ‘ஹிரு’ மற்றும் ‘தெரண’ ஆகிய ஊடகங்கள் நாட்டில் வன்முறையினை தூண்டும் நோக்கிலேயே செய்திகளை வெளியிட்டிருந்தன. முஸ்லிம் மக்களை குறியாகக் கொண்டு செய்திகளை முன்வைத்தனர். முஸ்லிம் மற்றும் வாள் தொடர்பில் தொடர்ச்சியாக செய்திகள் விரிவாக்கம் செய்து வெளியிடப்பட்டன. எமக்கு ‘சிரச’ தொலைக்காட்சியுடன் தனிப்பட்ட கோபங்கள் இருந்தும் குறித்த ஊடகம் நடுநிலையாக செய்தி வெளியிட்டிருந்தது. அவ்வாறே ஏனைய தொலைக்காட்சிகளும் நாட்டின் அமைதியினை காக்கும் விதத்திலேயே செய்தி வெளியிட்டிருந்தன. முஸ்லிம் மக்களால் தான் விரைவில் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்த முடிந்தது. அவர்களே எமக்கு பயங்கரவாதிளை காட்டிக் கொடுத்தனர்.இது எனது தனிப்பட்ட முடிவல்ல ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் சேர்ந்து ஆலோசித்து பெற்ற முடிவு..” என தெரிவித்திருந்தார்.