யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பம்..

(FASTNEWS| COLOMBO) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பீடாதிபதிகளுக்கும் நாளை(17) இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து உத்தியோகபூர்வ பதிவாளர் அறிவிப்பார் என அறிய முடிகின்றது.

பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக பதிவாளர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.