
சிவப்பு குடமிளகாய் அபாய நோய்களுக்கான நோய் நிவாரணி…
(FASTNEWS| COLOMBO) – சிவப்பு மிளகாய் பார்ப்பதற்கு அழகாய் இருப்பதோடு சமையலில் இதன் பயன்களும் ஏராளம். இதனால் வரை இதை ஒரு காய் வகை என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் இது ஒரு பழவகை இதில் இல்லாத ஊட்டச்சத்துகளே இல்லை எனலாம். மிளகாய் பச்சையாக இருக்கும் போது பழுத்து வருவது தான் இது. அதனால் தான் அதன் நிறம் சிவப்பாக இருப்பதோடு அதன் சுவையும் லேசாக இனிப்பு சுவையுடன் இருக்கும்.
குறித்த சிவப்பு மிளகாயை அப்படியே சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள், மினரல்கள் என்று எல்லாம் இருப்பதால் தினசரி உணவில் கூட இதை நீங்கள் சேர்த்து கொள்ளலாம். மஞ்சள், ஆரஞ்சு, பச்சை இவற்றில் சிவப்பு மிளகாய் தான் மிகவும் சிறந்தது.
கண் பார்வையை அதிகரிக்க உதவுவதோடு, உடல் எடையினை குறைக்கவும் இது உதவும். மேலும், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரோல், புற்று நோய் மற்றும் ஆர்த்ரிட்டீஸ் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தவும் சிவப்பு மிளகாய் பெரிது உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
