பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்…

(FASTNEWS|COLOMBO) – வெசாக் தின நிகழ்வுகள் காரணமாக தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு பிரவேசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடமாடும் பொலிஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.