(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் தற்போதைய நிலமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக உடனடியாக பொது சபை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு 217 சட்டத்தரணிகள் கையொப்பமிட்ட யோசனை ஒன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் கௌசல்ய நவரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.