(FASTGOSSIP|COLOMBO) – பிரான்சின் அடையாளங்களில் ஒன்றான ஈபிள் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து டவரில் 12 நிமிட வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் விதமாக 1889 இல் கஸ்டேவ் ஈபிள் என்பவரால் குறித்த டவர் கட்டப்பட்டது.
324 மீற்றர் உயரம் கொண்ட இந்த டவரை கட்டி முடிக்க 2 ஆண்டுகளும் 2 மாதங்கள் ஐந்து நாட்கள் எடுத்தது. இதன் மொத்த எடை 7,300 டொன்.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் ஈபிள் டவர் 6 இன்ச் வளர்கிறது என்றும் குளிர்காலங்களில் அதே அளவு சுருங்குவதாகவும் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் சுற்றுலாவாரசிகள் ஈபிள் டவரை பார்வையிட வருகின்றார்கள்.
இக்கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரான்ஸ் அரசு நேற்று கொண்டாடியது. ஈபிள் டவரில் வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சியை பலர் ஆர்வமாக கண்டு இரசித்துள்ளனர்.

