மாகந்துரே மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு.. – விசாரணைகள் தொடர்கின்றது…

(FASTGOSSSIP| COLOMBO) – துபாயில் கைதாகி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் பலவற்றை கம்பஹா வெலிவேரிய பிரதேசத்திலிருந்து நேற்று(16) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.