கைதிகளை உறவினர்கள் பார்வை இடுவதற்கு 02 நாட்களுக்கு சந்தர்ப்பம்…

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை 18ஆம் திகதி நடைபெறவுள்ள விஷேட வெசாக் வைபவத்தின் காரணமாக அன்றைய தினம் கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.