சினமன் கிரேன்ட் தற்கொலைதாரியின் தொழிற்சாலைக்கு செப்பு டொன் 5000 வழங்குமாறு கோரியது சாந்த பண்டார… – UNP ஜனாதிபதியிடம் முறைப்பாடு…

(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு சினமன் கிரேன்ட் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலைக்கு செப்பு தகடுகள் 5000 டொன் சலுகை அடிப்படையில் விலைக்கு வழங்க உதவிய, ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய, இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

குறித்த தனது செப்புத் தொழிற்சாலைக்கு செப்பு மூலகங்கள் 5000 டொன் பெற்றுத் தருமாறு சாந்த பண்டார, தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையினால் உற்பத்தியாகும் செப்புக்களினால் நாட்டிற்கு பாரிய வருமானத்தினை ஈட்டித் தருவதாகவும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த கைத்தொழிற்சாலையினை முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய செப்பு தயாரிப்பு மூலகம் 5000 டொன் சலுகை விலைக்கு வழங்குமாறும் சாந்த பண்டார கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.