இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அமைச்சரவைக்கு…

(FASTNEWS | COLOMBO) – மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பில் அலரிமாளிகையில் இன்று(17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“…மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது.

குறித்த திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.