(FASTNEWS|COLOMBO) ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தர முடியும் எனவும் பாதுகாப்பு காரணங்கள் கருதி மதியம் 12 மணி முதல் 4 மணிக்கிடையில் விடுதிகளுக்கு வருகை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.