பிரேசிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மதுபான சாலைக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழநதுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.