
நாமலுக்கு FCID அழைப்பாணை
பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் எதிர்வரும் புதன்கிழமை (12) அன்று ஆஜராகும்படி, தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.யான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தனது தேர்தல் பிரசாரத்தை சீர்குலைப்பதற்கான ஒரு முயற்சி என்றும் இத்தேர்தல் உத்திகள் எதுவுமே இயங்காது என்றும் அவர் குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
(riz)