(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரான ஜமால்தீன் நௌஷாத் எனும் சந்தேக நபரை அவசர கால சட்டத்தின் கீழ் 03 மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குருநாகலுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று(19) இராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்துள்ள குறித்த நபர், நீண்ட காலமாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ளதோடு, அதன் செயற்பாட்டு உறுப்பினர் எனவும் தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.