சஹ்ரான் உயிரிழந்ததை DNA பரிசோதனையில் உறுதியாகியது!!!

(FASTGOSSIP | COLOMBO) – கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டமை  மரபணு பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

சஹ்ரான் ஹாசீமின் மகள், சகோதரி மற்றும் சஹ்ரானின் மனைவி ஆகியோரின் உயிரி மாதிரிகளைக் கொண்டு இந்த மரபணு பரிசோதனைகள் சில நாட்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரபணு குறித்த விசாரணை அறிக்கை இன்று(21) குற்ற புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.