
சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு முயற்சி
(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ம் திகதி இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்றுடன்(21) ஒரு மாதங்கள் பூர்த்தியாகின்றன.
குறித்த தாக்குதல்களில், இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் சுற்றுலாத்துறை பாரிய அளவில் வீழ்ச்சியை எதிர் நோக்கியது. இந்நிலையில், அதனை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.