(FASTNEWS|COLOMBO)- கைது செய்யப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்கு, ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்டவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று(21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.