(FASTNEWS|COLOMBO)- 2019 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் குறித்த காலத்தில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.