(FASTNEWS | COLOMBO) – பதவி காலம் முடிவடைந்த மாகாண சபைகளின் ஆளுநர்களால் முன்வைக்கப்படும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள வேண்டாமென, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் குறித்த கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் கடிதம் மூலம் இது தொடர்பில் அறிவித்தலொன்றை, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.