தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் பரிசீலிக்கப்படுவதுடன், குறித்த நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பிலும் முழுமையாக ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.