களனி பல்கலைக்கழகமானது எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் எதிர்வரும் 28ம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்பட பல்கலைக்கழக வட்டாரம் தீர்மானித்துள்ளது.

அதன் தொடர்பாடல் பிரிவு தெரிவிக்கையில், பல்கலைக்கழக அனைத்து பீடங்களதும் பீடாதிபதிகள் மற்றும் துணை அதிபர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் இடம்பெறவுள்ள வார இறுதி பட்டப்படிப்புகளும் வழமைபோல் இடம்பெறும் என பல்கலைக்கழகம் மேலும் தெரிவித்துள்ளது.