Cannes பட விழாவில் ஹாலிவுட் நடிகை மயங்கி விழுந்ததில் பரபரப்பு

(FASTGOSSIP |COLOMBO)- கேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை எல்லி பேனிங் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும பரபரப்பு ஏற்பட்டது.

கேன்ஸ் பட விழா விழாவையொட்டி ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பட விழாவின் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த ஹாலிவுட் நடிகை எல்லி பேனிங், கலந்துகொண்டார். இதன்போது திடீரென அவர் மயங்கி அருகில் கிடந்த இருக்கையில் சரிந்தார். இதனால் விருந்து நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டதுடன் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனடியாக எல்லி பேனிங் சிகிச்சைக்காக அங்கிருந்து அழைத்துச்செல்லப்பட்டார். முதலுதவிக்கு பின்னர் அவர் குணம் அடைந்தார்.

இதையொட்டி சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்ட எல்லி பேனிங், தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.