(FASTNEWS|COLOMBO) குருநாகல் மாவட்டத்தில் 1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மழை இல்லாமை மற்றும் படைப்புழு தாக்கமும் காணப்படுவதாக குருநாகல் மாவட்ட உதவி விவசாய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட விவசாயிகள் படைப்புழுவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதுடன்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.