(FASTNEWS|COLOMBO) அக்குரஸ்ஸ – ஊருமுத்த பகுதியில் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட மதுபான நிலையத்தை சுற்றிவளைப்பதற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது நேற்று(22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கசுன் சம்பத் என்ற 30 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.