(FASTNEWS|COLOMBO) பொகவந்தலாவை – கொட்டியாகலை மேல்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.