குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – குருநாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த வைத்தியர் சம்பந்தமாக குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.