ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் கடந்த 2 தினங்களாக நடந்து வந்த வன்செயல்களில் பொதுமக்கள் 51 பேர் பலியாகி உள்ளனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தாலிபான்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில்;
“ஆப்கானிஸ்தானில் வன்முறையை கைவிடுங்கள் என்று தாலிபான்கள், பிற தீவிரவாத இயக்கங்கள், அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறவர்கள் என அனைவரையும் நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது.
அங்கு ஒரு ஸ்திரமான, பாதுகாப்பான, வளமான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதில் அங்குள்ள அரசுக்கு ஒத்துழைப்பதில், உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “கடந்த 2 நாட்களாக காபூலில் நடந்து வருகிற வன்செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இத்தகைய வன்செயல்களை நியாயப்படுத்த முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
(riz)