தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி

தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி

(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜவன பரிபாலன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண மாதமொன்றில் 1,500 – 2,000 வரையான சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனத்திற்கு வருகை தருகின்ற நிலையில் குறித்த தாக்குதலுக்கு பின்னர் இதுவரையில் 165 பேரே சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகை தந்ததாகவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.