(FASTNEWS | COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை இன்று(27) மினுவாங்கொட நீதிமன்றம் தடை விதித்துள்ளது
மேலும், மினுவாங்கொட – பொல்வத்தை பகுதியில் வசிக்கும் கே.பி.அதுல தயாரத்ன, ஹீனடியன குருகம வசிப்பிடத்தினை கொண்ட கே.நுவன் உபேந்திர ஆகியோருக்கும் இவ்வாறு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் பின்னர் நீதிமன்றில் ஆஜராகிய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.