(FASTNEWS|COLOMBO) நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை, எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.