சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

(FASTNEWS|COLOMBO) சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக் கெண்டுள்ளனர்.

மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.