சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மினுவாங்கொட, கல்லொலுவ பகுதியில் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பகுதியில் மூவர், ஹவ்லொக் சிடியில் இருவர், குருநாகல் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பண்டாரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.