பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

(FASTNEWS|COLOMBO) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளபப்ட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(29) கூடவுள்ளது.

விசேட தெரிவுக்குழு இன்று(29) காலை 9 மணிக்கு கூடவுள்ளதுடன், ஊடக சந்திப்பை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.