
3 மாதங்களிற்குள் இ.போ.சபைக்கு 2,000 புதிய பேரூந்துகள்
(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 3 மாதங்களிற்குள் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2,000 பேரூந்துகளை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமாக 6,942 பேரூந்துகள் உள்ளதோடு, அவற்றில் 6,509 பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.