(FASTNEWS | COLOMBO) – அண்மையில் மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களில் 15 பேருக்கு மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அதுதவிர நாத்தாண்டிய பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதான 31 பேரையும் பிணையில் விடுவிக்க மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.