காற்றின் வேகம் 70 – 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்

(FASTNEWS|COLOMBO) கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது​.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.