(FASTNEWS|COLOMBO) திட உணவு மற்றும் அரை திட உணவுகளில் அடங்கியுள்ள சீனி ,உப்பு மற்றும் கொழுப்பின் அளவினை குறிக்கும் வர்ண குறியீடு முறை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதம் முதலாம் திகதியின் பின்னர் உற்பத்தி செய்யப்படும் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு காட்சிப்படுத்தப்படுதல் இதன்மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.